இளம் பெண்ணுக்கு காருக்குள் நேர்ந்த கொடுமை! தூக்கி எறியப்பட்ட கொடூர சம்பவம் - மீண்டும் ஒரு பாலியல் கோரம்

Report
55Shares

கடந்த சில வருடங்களாக பாலியல் குற்ற சம்பவங்கள் இந்தியாவில் அதிகமாகிவிட்டன. ஏற்கனவே பல அதிர்ச்சியான சம்பவங்கள் நாட்டையே உலுக்கின. சட்டம் இருந்தும் சரியான தண்டனை கொடுக்கப்படவில்லையோ என்பதே சாமனிய மக்களின் மனநிலை.

இந்நிலையில் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் 25 வயது இளம் பெண் ஒரு தான் போக வேண்டிய இடத்திற்கு சாலையில் லிப்ட் கேட்டு நின்றுள்ளார்.

அவ்வழியே காரில் வந்த இருவர் அவரை தங்கள் வாகனத்தில் ஏற்றியுள்ளனர். இதில் உள்ளே இருந்த ஒருவன் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து ஓடும் காரிலிருந்து சாலையில் வீசிவிட்டு சென்றுள்ளனர்.

ஆடைகள் கிழிந்த நிலையில் தவித்துக்கொண்டிருந்த அப்பெண்னை அப்பகுதி மக்கள் போலிசாரின் உதவியோடு மீட்டுள்ளனர். பின் வழக்கு பதிவு செய்யப்பட்டதில் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவரை கைது செய்ததோடு காரையும் பறிமுதல் செய்தனர்.

2092 total views