வச்சாங்கல ஆப்பு! நடிகர் சங்க விவகாரம்! வெளியானது நீதிமன்ற அதிரடி தீர்ப்பு

Report
62Shares

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் மிகுந்த கவனத்தை ஈர்த்தது. கடந்த சில மாதங்களுக்கு முன் நாசர் தலைமையில் பாண்டவர் அணியும். பாக்யராஜ் தலைமையில் சங்கரதாஸ் அணியும் மோதியது.

வாக்காளர் பட்டியல் முறையாக தயாரிக்கப்படவில்லை, தபால் ஓட்டுக்களை அனுமதிக்கவில்லை என குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டு தேர்தலை நிறுத்தி வைக்கும் நிலைக்கு போனது.

ஆனால் விஷால் தொடர்ந்த வழக்கால் தேர்தல் நடத்தப்பட்டும், ஓட்டு எண்ணப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் நிலுவையிலிருந்த இது குறித்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வந்தது.

இதில் நடிகர் சங்க தேர்தலை ரத்து செய்ததோடு, மறு தேர்தலை நடத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

3158 total views