இந்த வயதிலும் தாம்பத்யம்! முழு சுகம் தருமா? மருத்துவர்கள் சொல்லும் ஆராய்ச்சிப்பூர்வமான உண்மை

Report
1660Shares

இல்லறம் நல்லறமாக அமைந்து நல் வாழ்க்கை வாழ்வதே சிறந்த மனித வாழ்க்கை. திருமண வாழ்வில் குழந்தை செல்வம் முக்கியமானதாக கருதப்படுகிறது.

அந்த உயிர் உருவாக ஆண், பெண் உறவில் இணையும் நிகழ்வும் வாழ்க்கையில் முக்கிய தருணம் தான். இதில் தாம்பத்ய வாழ்க்கை குறித்த சந்தேகங்கள் பலருக்கும் இருக்கிறது.

அதில் ஒன்று வயது போக போக தாம்பத்யத்தில் ஆர்வம் குறைந்துவிடுமா, சுகம் தருமா என்பது தான்.

இந்த விசயத்தில் அமெரிக்காவில் செக்ஸ் தெரபி மற்றும் ஆராய்ச்சியை சேர்ந்த சாலி சமாச்சர், நடுத்தர வயதில் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டாலும் அது எந்த வகையில் செக்ஸ் ஈடுபாட்டை பாதிப்பதில்லை என கூறியுள்ளார்.

மேலும் அவர்களின் ஆராய்சிக்கான சர்வேயில் 40 வயதுகளில் உள்ள தம்பதியினர் பலர் முன்பை விட இந்த வயதில் தான் உடல் சுகத்தை முழுமையாக அனுபவிப்பதாக கூறினார்களாம்.

இளம் வயதில் திருமணம் ஆன போது இருந்த ஆர்வனும் வேகமும் இப்போது தணிந்திருக்கிறது. ஆனால் தாம்பத்யத்தில் முழுமையாக சுகத்தை உணர்கிறோம் என கூறினார்களாம்.

மேலும் 50 வயதை பெண்கள் கடக்கும் போது மாத விலக்கு முழுமையாக நின்று விடுகிறது. அதற்கான உடல் மாற்றங்கள் 45 வயதுக்கு மேலே அதன் அறிகுறிகளும் தொடங்கிவிடுகிறது.

மாத விடாய் சீரற்ற முறையில் தொடர்ந்து பெண் உறுப்பின் உட்புற சுவர்கள் வறண்டதாகவும் மெல்லியதாகவும் மாறிவிடுகிறது. மோகம் கொள்ளும் போது அந்த உறுப்பு மெதுவாக தான் திரவத்தை சுரக்கிறது.

அப்போது ஆண் முரட்டுத்தனமாக பெண்ணிடம் உறவு வைத்தால் பெண்களுக்கு வலி ஏற்படலாம். இதை தவிர்க்க எண்ணெய் அல்லது அதற்காக விற்கப்படும் திரவங்களை பயன்படுத்த மருத்துவர்கள் அறிவுருத்துகிறார்கள்.

அதே போல ஆண்களின் உடலிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. மேலும் 20 முதல் 30 வயதான காலகட்டத்தில் அந்த திரவம் அதிகமாக சுரக்கிறது. அதே போல 30 வயது மேல் அது குறையத்தொடங்குகிறது.

30 வயதுக்கு மேல் 60 வயதுக்குள் டெஸ்ட்ரோஸ்ரோன் அளவு மிக குறைந்து விடுகிறது என கூறும் நியூயார் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள், அந்த வயதில் உறவு வைத்துக்கொள்ள ஆர்வம் குறைந்தாலும், ஈடுபட்டால் சுகத்தில் குறைகள் இருக்காது என கூறுகிறார்கள்.