5 லட்ச ரூபாய்க்கு ஆன்லைனில் ஆர்டர்! டெலிவரி வாங்கிய தம்பதிக்கு காத்திருந்த அதிர்ச்சி! வீட்டிற்கு வந்து பறிமுதல் செய்த போலிசார்

Report
26Shares

உலகமே டிஜிட்டல் மயமாகி வருகிறது. இருந்த இடத்திலிருந்தே தேவையானதை பெற்றுக்கொள்ள ஆன்லைன் வர்த்தக வசதிகள் வந்திவிட்டன. பலருக்கு இச்சேவை சௌகரியமாக இருந்தாலும் சிலருக்கு அசம்பாவிதமாக முடிந்து விடுகிறது.

அது போல தான் பிரான்ஸ் நாட்டின் ஹாவ்ரே நகரை சேர்ந்த தம்பதிக்கு நிகழ்ந்துள்ளது. அழகான பூனைகளை வளர்ப்பதில் ஆர்வமுள்ள அவர்கள் ஆப்பிரிக்காவை சேர்ந்த சவானா வகை பூனை குட்டியை ஆன்லைனில் விளம்பரத்தை பார்த்துவிட்டு ஆர்டர் செய்துள்ளனர்.

இதற்காக 6 ஆயிரம் யூரோக்களை விலையாக கொடுத்துள்ளனர். இந்திய மதிப்பு சுமார் 5.15 லட்சம் ரூபாய்.

வீட்டிற்கு பூனைக்குட்டியும் வந்தது. டெலிவரி வந்ததை ஆர்வமுடன் வாங்கி வளர்த்து வந்தனர். பின் ஓராண்டில் பூனையின் நடவடிக்கையில் ஏதோ வித்தியாசம் தெரிய சந்தேகமடைந்த அந்த தம்பதி போலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

விலங்கியல் நிபுணர்களுடன் வந்த போலிஸ் அந்த பூனைக்குட்டியை பரிசோதனை செய்ததில் அது பூனையல்ல, சுமத்ரன் வகை புலிக்குட்டி என தெரியவந்ததால் அக்குட்டியை கைப்பற்றி வன உயிரியல் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.