பாகுபலியை தோற்கடிக்கும் சண்டைக்காட்சிகள் - இந்த படத்திலா

Report
155Shares

பாகுபலி, தென்னிந்திய சினிமாவையே ஏன் மொத்த இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த படம். இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்ட இப்படதிற்கு 5 வருடங்களாக தனது மொத்த உழைப்பையும் கொட்டியுள்ளவர், படத்தின் ஹீரோ பிரபாஸ். இதனால் அவர் உலக சினிமா அளவுக்கு பிரபலமாகியுள்ளார்.

இத்தைகைய மிகப்பெரிய பட்ஜெட் படத்தை அடுத்து பிரபாஸ் என்ன படத்தில் நடிக்க போகிறார் என திரையுலகமே காத்திருந்த வேளையில் சுஜித் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என நான்கு மொழிகளிலும் தயாராகின்ற சஹோ படத்தில் நடிக்க இருக்கிறார் என தகவல் வெளியானது.

பாகுபலியவே தோற்கடிக்கும் என எதிர்பார்க்கபடுகின்ற இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரதா கபூர் நடிக்க இருக்கிறார். மேலும் அருண்விஜய், நீல் நிதின் முகேஷ் வில்லன்களாக நடிக்க மந்திர பேடி, ஜாக்கி ஷெராப் போன்றோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

அதிரடி சண்டைக்காட்சிகள் நிறைந்த இப்படத்திற்கு ’டை ஹார்ட்’, ‘டிரான்ஸ்பார்மர்ஸ்’ போன்ற ஹாலிவுட் படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டர்களாக பணியாற்றிய கென்னி பேட்ஸ் இப்படத்திற்கு சண்டை பயிற்சியாளராக பணியாற்றுகிறார். இப்படத்தில் மிகப்பெரும் சண்டைக்காட்சியை அபுதாபியில் 60 நாட்களாக படமாக்கியுள்ளனர்.

மேலும் இந்த சண்டைக்காட்சி இதுவரை எந்த இந்திய சினிமாவிலும் இடம்பெறாத வகையில் இருக்கும் என படக்குழு கூறியுள்ளது. இதனால் இப்படத்திற்கு எதிர்ப்பார்ப்பு கூடியுள்ளது. இதன் 3ம் கட்ட படப்பிடிப்பு ஜூலை 11ம் தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது.

5536 total views