பர்ஸ்ட் பார்ட்டே ப்ளாப்பு, இதுல செகண்ட் பார்ட் வேறையா? சூர்யாவை கலாய்க்கும் ரசிகர்கள்

Report
828Shares

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்பவர், இவர் அடுத்தடுத்து சில முக்கிய இயக்குனர்கள் திரைப்படங்களில் நடிக்கவிருக்கிறார்.

இவர் நடிப்பில் கடந்த 2016-ல் இயக்குனர் விக்ரம் கே.குமார் இயக்கத்தில் வெளியான சயின்ஸ் பிக்ஷன் திரைப்படம் 24.

இப்படம் வெளியாகி பெரிய அளவில் வசூல் சாதனை புரிந்தது. தற்போது இரண்டாம் பாகம் குறித்து இயக்குனர் விக்ரம் கே. குமார் ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது " 24 திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக பல விதமான கதைகளை தேர்ந்தெடுத்து எழுதியுள்ளேன். ஆனால் எந்த கதையும் எனக்கு திருப்தி அளிக்கவில்லை.

மேலும் அந்த கதை எனக்கு திருப்தி அளிக்கும் வகையில் இருந்தால் மட்டுமே சூர்யா சார்-யிடம் அந்த கதையை கூறுவேன். நாங்கள் கண்டிப்பாக 24 திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்குவோம், அதற்கான வேலைகள் நடந்து கொண்டு இருக்கிறது".