கமலுடன் அரை குறை உடையில் மூன்று பெண்கள்! போஸ்டரை போட்டு பதிலடி கொடுத்த இயக்குனர்

Report
333Shares

சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கி ஹீரோவாக நடித்துள்ள இருட்டு அறையில் முரட்டு குத்து இரண்டாம் பாகத்தின் டீசர் வெளியாகி பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

இரட்டை அர்த்த வசனம் என்பதையும் தாண்டி நேரடியாக பேசும் ஆபாசம் கலந்த வசனங்களாய் இதில் இருக்க ரசிகர்கள் சிலரே முகம் சுளித்துள்ளனர் என்பதை விமர்சனங்கள் காட்டுகின்றன.

இந்நிலையில் தமிழ் சினிமாவுக்கு தனி அடையாளம் காட்டிய இயக்குனர் பாரதி ராஜா இந்த பட டீசர் குறித்து தன் கோபம், வருத்தம், வேதனைகளை கருத்துளாக வெளிப்படுத்தியதோடு எதிர்ப்பும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இயக்குனர் கமல் ஹாசன் நடிப்பில் 1981 ல் வெளியான டிக் டிக் டிக் படத்தின் கமலுடன் மூன்று பெண்கள் அரை குறை உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அவர் இத பாத்துட்டு கூசாத கண்ணு இப்போ கூசிருச்சோ என பாரதி ராஜாவுக்கு பதிலடி கொடுத்ததுடன் அவர் கருத்துக்கு ஆதரவாக இருந்த சானல்களுக்கும் பதிலடி கொடுக்கும் விதமாக பதிவிட்டுள்ளார்.

டிக் டிக் டிக் படம் பாரதி ராஜா இயக்கத்தில் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.