18+ சர்ச்சைக்குரிய டீசரை நீக்க அதிரடி உத்தரவு.. இரண்டாம் குத்து படக்குழுவிற்கு ஆப்பு

Report
62Shares

சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் 18+ சர்ச்சைக்குரிய வகையில் இரண்டாம் குத்து பத்ம எடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர், டிரைலர் என அணைத்தாலும் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

18+ காட்சிகள், இரட்டை அர்த்த வசங்களை நிரம்பியுள்ளதால் பெரும் சர்ச்சை திரையுலகில் நிலவியது. இயக்குனரும் இப்படத்தின் ஹீரோவுமான சந்தோஷ் பி. ஜெயக்குமார், தன் தரப்பு வாதங்களை ஏற்கனவே எடுத்து வைத்தார்.

இந்நிலையில் இரண்டாம் குத்து' திரைப்படத்தின் டீசரை இணையத்தில் இருந்து நீக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தீபாவளிக்கு இப்படம் வெளியாகும் என படக்குழுவால் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டுவிட்டது. இந்நிலையில் இப்படியான தீர்ப்பு படக்குழுவை அதிர்ச்சி அடையச்செய்துள்ளது.