நயன்தாராவாக ஸ்ரீ தேவியின் மகள்.. அதுவும் இந்த கதாபாத்திரத்திலா? அப்போ காதலர் யார்

Report
8Shares

நெல்சன் இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வெளியான திரைப்படம் கோலமாவு கோகிலா.

இந்த திரைப்படத்தின் கதை தமிழ் திரையுலகில் புதிதாக இருந்ததால் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிபெற்றது.

இந்நிலையில் தற்போது கோலமாவு கோகிலா திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய முடிவெடுத்துள்ளார்களாம்.

பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் இப்படத்தில் நயன்தாரா கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம். இதனால் ஜான்வி கபூரின் ஜோடியாக யோகி பாபு நடிப்பாரா என்று கேள்வி எழுந்துள்ளது.

இப்படத்தை தனுஷை 'ராஞ்சனா' படம் மூலம் இந்தியில் அறிமுகப்படுத்திய இயக்குனர் ஆனந்த் எல் ராய் இப்படத்தை தயாரிக்கிறார்.

அறிமுக இயக்குனர் சித்தார்த் சென்குப்தா இப்படத்தை இயக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பஞ்சாப் மாநிலத்தில் வருகிற ஜனவரி மாதம் ஆரம்பமாக உள்ளது என்று தெரிவிக்கின்றனர்.