50 வயதில் இப்படி இருக்க வேண்டும் : கஸ்தூரி போட்ட டிவிட்

Report
277Shares

தன்னுடைய 50 வயதில் தன்னுடைய உடல் பாலிவுட் நடிகை சல்மா ஹாயக் போல் இருக்க வேண்டும் என நடிகை கஸ்தூரி டிவிட் செய்துள்ளார்.

நடிகை கஸ்தூரி டிவிட்டரில் ஆக்டிவாக இருக்கும் நபர் ஆவார். தனக்கு தோன்றும் அனைத்தையும் வெளிப்படையாகவும், தைரியமகாவும் அவர் டிவிட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த ஜனவரி 1ம் தேதி “ 50 வயதில் நான் நடிகை சல்மா ஹாயக் போல் இருக்க வேண்டும். இதுதான் என் புத்தாண்டு உறுதிமொழி” எனக் குறிப்பிட்டு சல்மா ஹாயக் பிகினி உடையில் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

இதனைக் கண்ட ரசிகர்கள் “ ஏன் 50 வயது வரை பொறுக்க வேண்டும்?. இப்போதே நீங்கள் அழகாக இருக்கிறீர்கள். உடனே புகைப்படம் எடுத்து போடுங்கள்” என தெரிவித்து வருகின்றனர்.

12977 total views