அருந்ததி படத்தில் முதலில் நடிக்க கூப்பிட்டது என்னைதான்..குமுறும் பிரபல நடிகை!!

Report
237Shares

சிவப்பதிகாரம், குசேலன், குரு என் ஆளு, தடையற தாக்க படங்களில் நடித்தவர் மம்தா மோகன்தாஸ். இவர் பல்வேறு படங்களில் பாடல்கள் பாடியிருக்கிறார். தற்போது மலையாள படங்களில் நடித்து வருகிறார். சில வருடங்களுக்கு முன் கேன்சர் நோயால் பாதித்த மம்தா அமெரிக்காவில் சென்று சிகிச்சைக்கு பிறகு குணம் அடைந்தார். பின்னர் மீண்டும் நடிக்க வந்தார். சமீபத்தில் மம்தா அளித்த பேட்டியில் கூறியது:

சினிமாவில் சில வருடங்கள் நான் ஆர்வமில்லாமல் இருந்தேன். நடிக்க வந்த முதல் 4 வருடத்தில் மிகவும் குழப்பத்தில் இருந்தேன். படங்களில் நடித்துக்கொண்டிருந்தாலும் சரியான கதாபாத்திரங்களை நான் தேர்வு செய்யவில்லை. அருந்ததி படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் அந்த வாய்ப்பை ஏற்க மறுத்துவிட்டேன். பின்னாளில் அப்படம் சூப்பர் ஹிட் ஆனதுடன் அனுஷ்காவை நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்த்தியது.

இதையெல்லாம் ஒருகட்டத்தில் உணர்ந்து எனது சினிமா வாழ்க்கையை புதுப்பித்து நடிக்க முடிவு செய்தேன். ஆனால் அடுத்த 2 மாதத்தில் இன்னொரு உண்மை என்னை தாக்கியது. உடல்நிலை பாதிக்கப்பட்டு (கேன்சர் பாதிப்பு) தொடர்ச்சியாக மருத்துவமனைக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. அப்போது சினிமாவை விட எனது உயிரை கவனிக்க வேண்டிய சூழலுக்கு ஆளாகியிருந்தேன். இவ்வாறு மம்தா மோகன்தாஸ் கூறினார்.

7712 total views