இயக்குனரை டுவிட்டரில் கடுமையாக திட்டிய நடிகை!

Report
19Shares

நடிகை புனம் கவுர் இயக்குனர் ஒருவரை அவரது டுவிட்டர் பக்கத்தில் கடுமையாக திட்டியுள்ளார்.

நெஞ்சிருக்கும் வரை, உன்னைப்போல் ஒருவன், பயணம், வெடி, என் வழி தனி வழி, அச்சாரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பர் பூனம் கவுர், தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.

தற்போது ஸ்டார் ஹீரோ ஒருவருடன் நெருக்கமாக பழக பூனம் முயன்றபோது அதை இயக்குனர் தடுத்துவிட்டார் என இணைய தளம் ஒன்றில் தவறாக கூறப்படுயிருந்தது.

அதை கண்டதும் பூனம் கோபம் அடைந்தார். குறிப்பிட்ட இயக்குனர் பற்றி கடுமையாக திட்டி டுவிட்டர் பக்கத்தில் பதில் அளித்திருக்கிறார். 'ஹலோ... இணைய தளத்தில் புரளி எழுதிய நபரே நீங்கள் பொருள்பெற்றுக்கொண்டு டைரக்டருக்கு ஆதரவாக எழுதியிருக்கிறீர்கள் என்பது தெரிகிறது. அந்த டைரக்டர் என்ன சொல்ல வேண்டும் என எண்ணுகிறாரோ அதை பிரதிபலித்திருக்கிறீர்கள். அந்த கொடூர நபரை பற்றி யாரிடமும் நான் பேசியதில்லை.

மற்றும் இந்த மாதிரி பெண்களை இழிவுபடுத்துவதை நிறுத்திக்கொள்ளுங்கள் எனதும் கூறியிருந்தார். மற்றும் வாழ்க்கையில் அந்த நபர் திரைக்கதை எழுத அனுமதிக்க மாட்டேன் எனவும் கூறினார்.

இதை தொடர்ந்து பேசிய பூனம் திறமையில்லாத வெளிநாட்டு என்.ஆர்.ஐ நடிகைக்கு வாய்ப்பு கொடுத்துக்கொள்ளுங்கள் அதுபற்றி எனக்கு கவலையில்லை என்று கூறினார்.

831 total views