கார்த்திக்கு அடுத்த படத்தில் 2 கதாநாயகிகள்: ஜோடி சேரும் நிவேதா பெத்துராஜ்!

Report
14Shares

கார்த்திக்கு அடுத்த படத்தில் ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்க உள்ளார் மற்றும் இந்த படத்தில் 2 கதாநாயகிகள் நடிக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது.

கடைக்குட்டி சிங்கம் படத்தை தொடர்ந்து கார்த்தி அடுத்ததாக மித்ரன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் கார்த்தி ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்க உள்ளார். இந்த படத்தில் 2 கதாநாயகிகள நடிக்க உள்ளனர். மற்றொரு கதாநாயகியாக சாயிஷா சைகல் அல்லது கீரித்தி சுரேஷை நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தை இரும்புதிரை படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்க உள்ளார். அதை அடுத்து விஷாலை வைத்து இரும்புதிரை 2ஆம் பாகத்தை இயக்க உள்ளார்.

தமிழில் எழில் இயக்கத்தில் உருவாகும் ஜகஜால கில்லாடி, விஜய் ஆண்டனி நடிக்கும் திமிரு புடிச்சவன், பிரபுதேவா நடிக்கும் புதிய படம் ஆகியவற்றிலும் நிவேதா பெத்துராஜ் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.

மற்றும் நிவேதா பார்ட்டி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் மிக விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கபடுகிறது.

973 total views