
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருப்பது நடிகர் ரஜினிகாந்த். இதேபோல் நடிகைகளில் சூப்பர் ஸ்டாராக விளங்குபவர் நடிகை நயன்தாரா. இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்து வரும் படம்தான் தர்பார். இப்படத்தினை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார்.
இப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக சென்று முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் படத்தின் ஹீரோயினுக்கு கொடுக்கப்படும் முழு சம்பளத்தை படத்தின் இறுதி சூட்டிங் முடிந்தபிறகு தரப்படும் என்று கூறப்பட்டது.
சூட்டிங் நடைபெற்று முடிவுக்கு வரும் நேரத்தில் முழு சம்பளம் சொன்னவாறு கொடுக்கப்படவில்லை என்று படப்பிடிப்பிற்கு வராமல் இருந்துள்ளார். இதற்கு ரஜினிகாந்த் ஆவேசப்பட்டு பணத்தை கொடுங்கள் என்று கோபத்துடன் கூறியுள்ளார். இதனால் ரஜிகாந்த் நயன்தாராவிடமும் கோபமாக இருக்கிறார் என்று கிசுகிசுத்து வருகிறார்கள்.