கவின்-லாஸ்லியாவை சேர்த்து வைக்க வேண்டும்.. அப்பாவிடம் கெஞ்சும் பிரான்ஸ் பத்திரிக்கையாளர்.. வீடியோ உள்ளே..

Report
463Shares

பிக்பாஸ் 3 சீசன் கடந்த வாரம் சிறப்பான முறையில் நிறைவடைந்தது. இறுதி போட்டியாளராக முகன் தேர்வு செய்யப்பட்டார். சாண்டி, லாஸ்லியா ஷெரின் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பெற்றனர். இந்நிலையில் இறுதி போட்டியில் கவின் நான் ஆசைபட்டபடி நடந்துள்ளது என கூறி மகிழ்ந்தார்.

இதன்பின் போட்டியாளர்கள் பிக்பாஸ் பார்ட்டி முடிந்தவுடம் அவர்கள் வேலையை பார்க்க துவங்கிய நேரத்தில், மக்கள் மனதில் கேள்வியாக இருப்பது கவின் - லாஸ்லியா திருமணம் செய்துகொள்வார்களா? என்று தான்.

அதற்கு லாஸ்லியா - கவினிடம் இருந்து பதில் உறுதியாக வரவில்லை ஆனால் இருவரும் காதலிப்பது உண்மை என்று அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் இருவரும் சேர்ந்து சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று பிரான்ஸை சேர்ந்த ஒரு பத்திரிக்கையாளர் லாஸ்லியாவின் அப்பாவிற்கு வாய்ஸ் மெசேஜ் செய்துள்ளார்.

நான் உங்களை அண்ணா என்று நினைத்து கூறுகிறேன், தகப்பனாக நீங்கள் பட்ட கஷ்டம் அனைவரும் தெரிந்துள்ளோம், ஆனால் புலம்பெயர் நாடுகளில் பல பிரச்சனைகள் நிறைய இருக்கிறது. இதை நினைவில் கொண்டு முடிவெடுங்கள். இருவரும் உண்மையாக நடிக்காமல் துரோகம் செய்யாமல் இருந்தார்கள் என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் காதலால் படும் கஷ்டத்தை பற்றி கூறி, அந்த வலி அவர்களுக்கு கிடைக்காமல் இருக்க பார்த்துக்கொள்ளுங்கள் என்று கெஞ்சி கேட்டு கொள்ளும் ஆடியோ சமீபத்தில் வைரலாகி வருகிறது.