பிக்பாஸ் முடிந்தபிறகும் உன் தொல்லை தாங்க முடியலயே.. சிவகார்த்திகேயனை சீண்டிய மீராமிதுன்...

Report
450Shares

சிவகார்த்திகேயன், அணு இமானுவேல், சூரி, ஐஸ்வர்யா ராஜேஷ், மற்றும் இயக்குனர் பாரதி ராஜா மற்றும் பலர் இணைந்தும், பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் நம்ம வீட்டு பிள்ளை. இந்த படம் குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றிநடைபோட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து தற்போது இப்படத்தின் மேல் ஒரு நடிகை குற்றச்சாட்டு வைத்துளார். அவர் யார் என்றால் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 3யில் 16 பேரில் பெண் போட்டியாளராக கலந்து கொண்ட மீரா மிதுன் தான். இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் பொழுதும் தர்ஷன் மற்றும் சேரனின் பெயரை கெடுக்க ஏதேதோ கலகம் செய்தார். ஆனால் அது எதுவும் நடக்கவில்லை. பின் முகன் மீதும் வெளியில் வந்து இப்படி தொட்டான் என்று செய்தியை உருவாக்கினார்.

இதன் பிறகு குறும் படத்தால் அசிங்கப்பட்டு வெளியே வந்த பிறகும் நிறைய சர்ச்சைகளில் சிக்கினார் மீரா மிதுன். இந்நிலையில மீரா மிதுன் நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடித்திருந்தேன். அந்த காட்சிகளை இயக்குனர் பாண்டிராஜ் நீக்கிவிட்டார் என தற்போது அவர் மீது குற்றசாட்டை முன் வைத்துளார் மீரா மிதுன்.

விஜய் டிவியில் பிக்பாஸில் கலந்து கொண்டால் இப்படிதான் செய்வீர்களா என்று அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் நெட்வொர்க் மீது புகார் அளித்து வருகிறார்.