
தமிழ் சினிமாவில் நடிகைகள் 10 ஆண்டு நிலையாக இருப்பதே கஷ்டம். ஆனால் 20 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகையாக வளம் வந்துகொண்டிருக்கிறார் திரிஷா. 1999 ஆம் ஆண்டில் ஜோடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் இவர்.
அதற்கு பின் இவருக்கு எட்ட முடியாத அளவிற்கு பட வாய்ப்புகள் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் குவிந்த வண்ணம் உள்ளன. 96 படத்தின் மூலம் நம்மை கவர்ந்து இன்னும் தமிழ் சினிமாவில் அளிக்க முடியாத உயரத்தில் சென்று விட்டார் த்ரிஷா.
இந்நிலையில் த்ரிஷாவிற்கு நிறைவேறாத ஆசை ஒன்று இருந்ததாம். அது ஒரு நல்ல சொகுசு கார் வாங்க வேண்டுமாம். இதற்காக 65 லட்சத்திற்கு ஒரு பென்ஸ் சொகுசு காரை வாங்கி தனது நீண்டகால ஆசையை நிறைவேற்றி கொண்டாராம்.