போலி கணக்கில் மீரா செய்த பித்தலாட்டம்.. ரசிகர்களிடம் வசமாக சிக்கிய இண்டர்நேஷனல் மாடல்

Report
220Shares

பிக்பாஸில் எப்பொழுதும் பிரச்னையை கிளப்பி சர்ச்சையில் மாட்டிக்கொள்பவர் தான் மீரா மிதுன். வீட்டிற்குள் இருக்கும்போதே பல பிரச்னையை உருவாக்கிய இவர் வெளியே வந்தும் அடங்கவில்லை. சேரன், சாண்டி, முகன், தர்ஷன் மற்றும் கவின் இவர்களின் பெயரை கெடுக்கும் விதமாக தினமும் ஒரு வீடியோவை தனது இணையதளபக்கத்தில் பதிவு செய்து வருகிறார் மீரா மிதுன்.

இந்நிலையில் நான் தான் சூப்பர் இண்டர்நேஷனல் மாடல் என்று தனுக்கு தானே சொல்லிக்கொண்டு இருக்கிறார். இவருக்கு ரசிகர்கள் ஏராளமாக இருப்பது போல் இவர் சொல்லிக்கொள்ளுவார். இந்த விஷயத்தை நிஜமாக்கும் வகையில் கவுல் பிராமின் என்பவர் தனது ட்விட்டர் பகுதியில் மீராவை புகழ்வது போல் டிவிட்களை பதிவு செய்வார்.

இது உம்மையே இல்லை போலியான அக்கவுண்ட் என்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை பற்றி கவுல் பிராமினிடம் கேட்ட பொழுது. அது நான் தான் செய்கிறேன் மீராவை எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறினார். ஆனால் இப்போது அந்த அக்கவுண்ட் போலியானது தான் என்று தெரியவந்துள்ளது அந்த அக்கவுண்டை மீரா தான் வைத்துளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எப்படி என்றால் மீரா தெரு நாய் ஒன்றுக்கு உணவு தருவது போல் போட்டோ எடுத்துள்ளார். அதனை கவுல் அக்கவுண்டில் இருந்து போஸ்ட் செய்வது போல் தனது அக்கவுண்டில் போஸ்ட் செய்துவிட்டார் மீரா. இதனை பார்த்த நெட்டிசன்கள் இதெல்லாம் ஒரு பொழப்பா மீரா எதற்கு இந்த வீண் விளம்பரம் என்று மீராவை டிவிட்டரில் கிழி கிழினு கதறவிட்டு வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.