என் வாழ்க்கையில் நான் நடித்த மோசமான படம்.. நடிகரின் பெயரை சொல்லி அதிர்ச்சியளித்த பிரபல நடிகை..

Report
593Shares

நடிகைகளில் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கபடுபவர் நடிகை நயன்தாரா. இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலில் 'அய்யா' என்ற படத்தின் மூலம் நடிகர் சரத்குமாருக்கு ஜோடியாக அறிமுகம் ஆனார். மேலும், ரஜினியின் நடிப்பில் 2005-ஆம் ஆண்டு வெளிவந்த 'சந்திரமுகி' படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடித்து தமிழ் திரை உலகில் பிரபலம் ஆனார்.

மேலும், இவர் சோலோ ஹீரோயினியாகவும் தமிழ் சினிமாவில் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பி வந்தார். படம் நடிப்பது மட்டுமல்லாமல் சிறந்த கருத்து சொல்லும் படத்தை தேர்ந்தெடுத்து மக்கள் மனதில் ஆழமாக நின்று வருகிறார் நயன்தாரா.மேலும் இவர் பெரிதாக எந்த ஒரு நிகழ்ச்சியிலும் எந்த ஒரு பொது விழாவிலும் கலந்து கொள்ளமாட்டார். ஆனால் அண்மையில் இவர் தனியார் ரேடியோ சானலுக்கு பேட்டி கொடுத்திருந்தார்.

அப்போது அந்த பேட்டியில் பேசிய நயந்தாரா ”என் வாழ்க்கையில் நடித்த படத்திலேயே எனக்கு மிகவும் பிடிக்காத படம் சூரியா நடித்த 'கஜினி' தான், என்னதான் அந்த படம் சூப்பர் ஹிட் ஆகியிருந்தாலும் எனக்கு பிடிக்காது என்று அனைவருக்கும் அதிர்ச்சி தரும் வகையில் பேசியுள்ளார். மேலும் அந்த படத்தின் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் ஆவார். ஆனால், மறுபடியும் அவரது இயக்கத்தில் ரஜினிக்கு ஜோடியாக 'தர்பார்' படத்தில் நயன்தாரா நடித்து வருவது குறிபிடத்தக்கது.

18108 total views