ஹோட்டல் ஊழியருக்கு கொலை மிரட்டல்.. காவல் துறையை சீண்டிய பிக்பாஸ் நடிகை..

Report
20Shares

பிக்பாஸில் மட்டுமமில்லாமல் வெளி உலகிலும் சர்ச்சையை ஏற்படுத்தி வாழ்ந்து வருபவர் தான் மீராமிதுன். பிக்பாஸ் வீட்டிற்குள் அடங்காமல் தேவையில்லாத சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார் என்றால், வெளியே வந்தும் திருந்தியதாக தெரியவில்லை.

வீட்டிற்குள் இருந்த ஹவுஸ் மேட்களை அசிங்கமாக பேசி வீடியோக்களை வெளியிட்டார். மேலும், சேரனை பற்றி தரைகுறைவாக பேசி வந்தார். இதன்பின், பல சர்ச்சைகளில் இவர் பெயர் அடிபட்டு வந்தது.

மேலும், அண்மையில் மீரா கொடுத்திருந்த பேட்டி கூட இவருக்கு ஆபத்தாக மாறியுள்ளது. அது என்னவென்றால் அந்த பேட்டியில் கேள்விகளுக்கு பதிலளித்து கொண்டிருந்த இவர். காவல் அதிகாரிகளை மற்றும் உயர் அதிகாரிகளை அசிங்கமாக பேசியுள்ளார்.

அப்போது அங்கிருந்த ஹோட்டல் ஊழியர் ஒருவர் ஏன் இப்படி எல்லாம் பேசுகிறீர்கள் என்று மீராவை கேட்டுள்ளார். அதற்கு மீராமீதுன் அப்படி தான் பேசுவேன் என்று ஹோட்டல் ஊழியரை அசிங்கமாக பேசியுள்ளார். அதுமட்டுமல்லாமல் அந்த ஹோட்டல் ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார் மீரா.

இதற்காக இன்று மீராவின் மீது பல்வேறு வழக்கு பதிவுகள் செய்யபட்டுள்ளது. ஏற்கனவே நிறைய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இப்போது இது தேவையா என்று அனைவரும் இணையதளத்தில் மீராவை கலாய்த்து வருகிறார்கள்.