
சினிமாவில் பிரபலமானவர்களை விட தொலைக்காட்சியில் பிரபலமானவர்கள் தான் தற்போதைய நிலை. அவ்வாறு பலபேர் தொலைக்காட்சியில் சீரியல், தொகுப்பாளர் ஆகிய வாய்ப்பிற்காக வரிசையில் நிக்கிறார்கள். அந்தவகையில் பிரபலமானவர் தான் நடிகை ஸ்ருதி ராஜ். இவர் சினிமாவில் 1995ல் மலையாளப்படத்தில் நடித்து அறிமுகமானார்.
இதைதொடர்ந்து தமிழில் விஜய் நடித்த மாண்புமிகு மாணவன் படத்தில் நடித்தார். அதன்பின் சில படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். பெரிய அளவில் பிரபலமாக முடியவில்லை என்று சீரியல் பக்கம் திரும்பினார். இவரை ஸ்ருதி ராஜ் என்று கூப்பிடுவதை விட துளசி என்று கூப்பிட்டால்தான் அனைவருக்கும் தெரியவரும்.
பிரபல தொலைக்காட்சியில் தென்றல் என்ற சீரியலில் நடித்து துளசி என்ற கதாபாத்திரத்தில் ரசிகர்களை கவர்ந்தா. பல ஆண்டுகள் தொகுப்பாளர் தீபக்கிற்கு ஜோடியாக அந்த சீரியலில் நடித்து அனைவரின் ஆதரவை பெற்றார். மேலும் வேரொரு தனியார் தொலைக்காட்சியில் ஆப்பிஸ் என்ற சீரியலில் நடித்து ரசிகர்கள் படையை இன்னும் அதிகமாக்கினார்.
தற்போது 39 வயதாகும் ஸ்ருதி ராஜ் இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கிறார். இதற்கான காரணத்தினை எந்த மீடியாவிலும் சொல்லாமல் இருந்து வருகிறார். இதற்கு யாராவது கேள்வி கேட்டால் விரைவில் கூறுகிறேன் என்று மழுப்பிவிடுகிறார்.
தற்போது அழகு என்ற சீரியலில் நடித்து மேலும் உடலுக்கு அழகு சேர்த்து வருகிறார் நம்ம ஸ்ருதி ராஜ்.