சிம்ரனை சர்ச்சையில் சிக்க வைத்த பிக்பாஸ் நடிகை..வெளுத்து வாங்கிய ரசிகர்கள்..

Report
555Shares

பிக்பாஸ் மட்டுமல்ல வெளியிலும் சர்ச்சையில் மட்டுமே வாழ்ந்து வருபவர் நடிகை மீரா மிதுன். கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவுசெய்வது, மற்றும் சக நடிகர் நடிகைகளை பற்றி தவறாக பேசுவது போன்ற சர்ச்சைகளில் சிக்கி தவித்து வந்தார் மீரா.

மேலும் சமீபத்தில் கூட காவல் துறையை சர்ச்சைக்குரிய விதமாக தவறாக பேசி, மற்றும் ஹோட்டல் ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்தது தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல் துறையினரிடம் மாட்டிக்கொண்டு தவித்து வருகிறார் மீரா மிதுன்.

இந்நிலையிலும் மீரா தனது டிவிட்டர் பக்கத்தில் பிரபல நடிகை 'சிம்ரனுடன்' இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் நடிகை சிம்ரனை பற்றி மீரா கூறியிருந்தது. "20 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் ஒரு நடிகையாக ஆட்சி செய்து வருகிறார் சிம்ரன். இவரை தவிர வேற யாரை நான் பார்க்க வேண்டும் இவர் தான் என்னுடைய வெள்ளித்திரை ராணி இவர் மட்டும் தான் 'தி ஹீரோயின்' எப்போதுமே" என்று சிம்ரனை பாராட்டி பதிவிட்டிருந்தார் மீரா.

இந்த டிவிட்டை பார்த்த ரசிகர்கள் கமெண்டில் மீராவை மட்டும் செமையாக கலாய்த்து வருகிறார்கள். அந்த வகையில் ஒரு ரசிகர் போட்ட கமெண்ட் தான் இது 'மீராவைவிட சிம்ரன் இளமையாக இருகாங்க, மீரா கிழவி' என்று கமெண்ட் செய்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணைதளங்களில் மீராவால் சர்ச்சையில் சிக்கி பரவலாக வைரலாகி வருகிறது.