மனைவி என்பதை மறந்துபோன தீபிகா.. தொகுப்பாளர் கேள்வியால் அசிங்கப்பட்ட நடிகை..

Report
238Shares

பாலிவு சினிமாவையே தன் கைக்குள் அடக்கி வைத்திருப்பவர் தான் தீபிகா படுகோனே. பாலிவுட் அல்லாமல் ஹாலிவுட்டிலும் பிரபல நடிகையாக வளம் வருகிறார். மேலும் தென்னிந்திய படங்களில் அதிகளவில் நடிக்காத தீபிகா ரஜினியின் கோச்சடையான் படத்தில் நடித்துள்ளார்.

கடந்த வருடம் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். விருது விழாக்களிலும், பண்டிகை நாட்களிலும் இவர்கள் எடுக்கும் புகைப்படங்கள் வீடியோக்கள் பலரை வியப்பில் ஆழ்த்தி வருகிறது.

இந்நிலையில் தீபிகா படுகோனே சில தினங்களுக்குமுன் The Live Love Laugh Foundation என்ற விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார். அங்கு தொகுப்பாளரின் சில கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

அதன்பின் அரங்கில் இருப்பவருக்கு சில செய்தியை கூறும் பொழுது, நான் மகள், சகோதரி, நடிகை என்று கூறினார். தொகுப்பாளர் ஒரு மனைவி என்று கூறி நியாபகப்படுத்தி விட்டார். இதற்கு தீபிகா அதிர்ச்சியடைந்து, அதை நான் மறந்துவிட்டேன் என்று கூறி சிரித்து நான் மனைவி என்று கூறினார்.

தான் மனைவி என்பதை மறந்த தீபிகாவை ரசிகர்கள் சிலர் மீம்ஸ்களை வெளியிட்டு வருகிறார்கள்.