46 வயதில் இரண்டாவது திருமணத்திற்கு தயாராகும் பிரபல பாலிவுட் நடிகை..

Report
104Shares

திரையுலக பிரபலங்கள் தனது சொந்த வாழ்க்கையில் இரண்டாவது திருமணம் செய்து கொள்வது தற்போது மிகவும் சகஜமாகிவிட்டது. ஆனால் அதிலும் வயது வித்தியாசம் இல்லாமல் காதல் திருமணம் செய்து கொள்கிறார்கள். உதாரணமாக நடிகை ப்ரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனாஸ் இவர்களின் திருமணம் கூட சொல்லலாம்.

இந்நிலையில் 46 வயதாகும் பிரபல பாலிவுட் நடிகை 'மலைகா அரோரா' அவரகள் பிரபல தயாரிப்பாளரான போனி கபூரின் மகன் 'அர்ஜுன் கபூரை' காதலித்து வந்தார்கள். தற்போது இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள போகிறார்கள் என்று செய்திகள் கசிந்து வருகின்றன.

மேலும் மலைகாவிற்கு ஏற்கனவே 'அர்பாஸ் கான்' என்பவரோடு முதல் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 16 வயதில் மகனும் உள்ளார். இப்படியிருக்க 2017 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்றுக்கொண்டனர். இதற்கு பிறகு அர்ஜுன் கபூரை காதலித்து வருகிறார் நடிகை மாளவிகா.

இந்த செய்தியை கேள்விப்பட்ட ரசிகர்கள் 16 வயதில் மகனை வைத்துக்கொண்டு இரண்டாவது திருமணம் தேவையா? என்று மாளவிகாவை சமூக வலைத்தளங்களில் வெளுத்து வாங்கி வருகிறார்கள்.

தற்போது அர்ஜுன் கபூரும் மாளவிகாவும் நெருக்கமாக எடுத்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் மாளவிகாவின் முன்னாள் கணவர், பிள்ளையுடன் எடுத்து கொண்ட புகைப்படங்களும் பரவலாக இணையதளங்களில் வைரலாகி வருகிறது.