2 வருடம் ஆகியும் ஏன் குழந்தை இல்லை.. ரசிகர்களின் கேள்விக்கு பதிலடி கொடுத்த சமந்தா..

Report
174Shares

தென்னிந்திய சினிமாவில் தற்போது முன்னணி நடிகைகளாக பலபேர் இருக்கிறார்கள். அதில் அனைத்து படங்களின் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பவர்கள் ஒருசிலரே. அந்தவகையில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. பானா காத்தாடி முதல் சூப்பர் டீலெக்ஸ் படம் வரை தமிழில் மிகப்பெரிய இடத்தினை பிடித்தவர்.

பல படங்களுக்கு விருதுகளையும் பெற்று கனவு நாயகியாகவும் ஜொலித்து வருகிறார். கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் நாகர்ஜுனாவின் மகன் நாக சைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பின்னும் சினிமாவின் ஆசையால் பல படங்களில் கமிட்டாகி குடும்பத்தாரின் விருப்பத்தோடு நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமந்தாவிற்கு திருமணமாகி 2 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் பல கேள்விகள் ரசிகர்கள் கேட்டு வருகிறார். சமீபத்தில் சமுகவலைத்தளத்தில் நேரலையில் வந்த சமந்தாவிடன் பல்பேர் கேள்விகளை எழுப்பினர். அதில் ஒரு ரசிகர் எப்போது உங்கள் குழந்தை வெளிவரும் என்று சர்ச்சையான கேள்வியை கேட்டு சமந்தாவை கோபப்படுத்தியுள்ளார்.

இதற்கு பதிலடி கொடுத்த சமந்தா அவரின் கேள்விக்கு, ‘என்னுடைய உடல் எப்படி செயல்படுகிறது என்று கேட்பவர்களுக்கு, வருகிற 2022ல் ஆகஸ்ட் மாதம் சரியாக 7 மணிக்கு நான் குழந்தை பெற்றுக்கொள்வேன்’ என்று கூறியுள்ளார். இன்னும் கர்பமாகாத நிலையில் சமந்தா இப்படி 2 வருடங்களுக்கு பிறகு குழந்தை பெற்றெடுப்பதை சரியான நேரத்தோடு கூறியிருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.