நடிகை நயன்தாரா பற்றி யாருக்கும் தெரியாத பல உண்மையை உளறிய மனோபாலா..

Report
681Shares

தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக ரசிகர்களை கவர்ந்து வருபவர் நடிகை நயன்தாரா. வருடங்களுக்கு பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் நயன் தாரா பிசி நடிகைகள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்து வருகிறார்.

சமீபத்தில் விஜய்யுடனான நீண்ட கால நடிப்பை பிகில் படத்தின் மூலம் தீர்த்து வைத்துள்ளார். இந்நிலையில் நயன்தாரா திரைத்துறைக்கு வந்தது முதல் பல பிரச்சனைகள், பல கிசுகிசுக்கைளை சந்தித்து வருகிறார். இதில் சிம்புவுடனான காதல் என்று வல்லவன் படத்திற்கு பிறகு பேசப்பட்டு வந்து முடிவுக்கு வந்தது.

நடன இயக்குநர் பிரபுதேவாவுடனான காதல் பற்றி நடிகரும் இயக்குநருமான மனோபாலா சில உண்மைகளை கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அதில் நயன்தாராவை எனக்கு பல வருடங்களாக நெருக்கமானவர். நல்ல சகோதரி என்று கூறி, படப்பிடிப்பில் அவரை பார்த்த போது அவரது கையில் பிரபு என்று பச்சை குத்தி வைத்திருந்தார். இதை பார்த்து நான் அதிர்ச்சி அடைந்து அவரின், இப்படி பச்சை குத்தினால் வருங்காலத்தில் பிரச்சனையாக போகிறது என்று கூறினேன்.

அதற்கு அவர் நான் பார்த்துக்கொள்கிறேன் சார், பரவாயில்லை என்று கூறி, ஆதவன் படத்தின் பாடலில் பச்சை குத்தியதை மறைக்க கையில் முழுவதும் வலையல்களால் அதை மறைத்துவிட்டார் என்று கூறி உண்மையை உளறிவிட்டார்.

ஆனால் நடிகை நயன்தாரா அவரிடம் இருந்த காதலை முறித்துவிட்டு தற்போது இயக்குநர் சந்தோஷ் சிவனுடன் காதலில் இருக்கிறார் என்பது அவர்கள் எடுத்துக் கொள்ளும் புகைப்படத்தை பார்த்தாலே தெரியவரும்.

22933 total views