பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகையாகவும், ஹாலிவுட் நட்சத்திரங்கள் பட்டியலில் சமீப ஆண்டுகளாக கலக்கி வருபவர் தான் நடிகை ப்ரியங்கா சோப்ரா. இவர் ஹாலிவுட் பாடகரான நிக் ஜோனஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது கணவருடன் நியூயார்க்கில் பல கோடி மதிப்பிலான வீட்டினை சமீபத்தில் கணவருக்கு பரிசாக அளித்துள்ளார்.
இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டதால் வெளியில் சகஜமாக சென்று வருகிறார்கள். விருதுவிழாக்களுக்கும் ப்ரியங்கா கவர்ச்சி ஆடையில் மோசமாக சென்று வருகிறார்.
இந்நிலையில் அவர் வீட்டிற்கு புதிய நாய் ஒன்றினை வாங்கியுள்ளார் ப்ரியங்கா. இதை தன் கணவர் நிக் படுக்கையறையில் தூங்கிக் கொண்டிருக்கும் போது சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். இதை வீடியோவாக எடுத்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதை சுமார் 5.5 மில்லியனுக்கும் அதிகமானோர் இந்த வீடியோவை லைக் செய்துள்ளனர்.