கமல்ஹாசனுக்கு என்ன ஆனது?.. மருத்துவமனைக்கு செல்ல இதுதான் காரணம்!.

Report
32Shares

இந்திய சினிமாவில் பல நடிகர்கள் உருவாகி வரும் நிலையில் உலக நாயகன் என்ற பெயரை தன் உழைப்பால் பெற்றவர் நடிகர் கமல்ஹாசன். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் மக்கள் நீதி மன்றம் என்ற கட்சியை ஆரம்பித்து அரசியல் பிரச்சாரங்களும் செய்து வருகிறார். சமீபத்தில் காலில் ஏற்பட்ட எலும்பு முறிவால் சிகிச்சை மேற்கொண்டு டைட்டானியம் கம்பி பொருத்தப்பட்டது.

சமீபகாலமாக படங்கள், அரசியல், பிக்பாஸ் நிகழ்ச்சி என பிசியாக இருந்து வருவதால் காலில் ஏற்பட்ட பிரச்சனையை மறந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் காலில் பொருத்தப்பட்ட டைட்டானியம் கம்பியை மருத்துவர்கள் நீக்கியுள்ளனர். தற்போது அவ உடல்நிலை சரியாக இருப்பதாக தகவல் வந்துள்ளது.