விஜய்யை பேட்டியில் அசிங்கப்படுத்திய நடிகை பார்வதி.. பிரபல நடிகர்கள் ஷாக்..

Report
837Shares

தமிழ் சினிமாவில் மரியான் படத்தின் மூலம் அறிமுகமான மலையாள நடிகை பார்வதி. இவர் மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். முன்னணி நடிகையாக இல்லாவிட்டாலும் நடிப்பில் விருதுகளை பெற்றவர்.

இந்நிலையில் சமீபத்தில் தீபிகா படுகோன், ரன்வீர் சிங், ஆயுஷ்மான் குர்ரானா, மனோஜ் பாஜ்பாய், விஜய் தேவரகொண்டா, ஆலியா பாட் , பார்வதி மற்றும் விஜய் சேதுபதி ஆகிய நடிகர் நடிகைகள் பேட்டியொன்றில் கலந்து கொண்டுள்ளனர். தங்கள் படத்தின் அனுபவங்களை பற்றி பேசி பகிர்ந்து கொண்டனர்.

பெண்கள் மீதான சமுகத்தில் இருக்கும் வெறுப்பை கூறி கைத்தட்டல் வாங்கும் படங்கள் அதிகளவில் வருகிறது. அதுவும் வன்முறைகளை தூண்டும் படங்களும் வருகிறது என்று பார்வதி கூறினார்.


மேலும் நடிகை பார்வதி நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்த அர்ஜுன் ரெட்டி படத்தை பற்றி பேசியுள்ளார். சினிமா மூலம் பார்வையாளர்களை கவர்ந்து நல்ல கருத்துகளை கொடுக்கும் படங்களை எடுக்க வேண்டும். அர்ஜுன் ரெட்டி படத்தில் காதலர்கள் கன்னத்தில் அடித்துக்கொள்ளும் காட்சிகள் வன்முறையை பெண்களிடன் புகுத்துவது போல் இருக்கிறது என்று கூறியுள்ளார்.

பேட்டியில் விஜய் தேவரகொண்டா இருப்பதை கூட கவலைபடாமல் அவர் நடித்த படத்தினை பற்றி இப்படி பேசியிருப்பது ரசிகர்களிடையே பாராட்டினை பெற்றுள்ளார் பார்வதி.