ஒரு ட்விட்டால் கதறும் பிக்பாஸ் நடிகை.. போலிசில் தஞ்சம்..

Report
26Shares

சினிமாவில் நடன இயக்குநராவதற்கு முன் சில படங்கள் மூலம் நடிகையாக வளம் வந்தவர் நடிகை காயத்ரி ரகுமான். இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு அனைவரையும் முரட்டி வந்தார்.

அதன்பின் சமுகவலைத்தளத்தில் மட்டும் ஆக்டிவாக இருக்கும் காயத்ரி சமுக கருத்துக்களை கூறி டிவிட் செய்வார். இந்நிலையில் வி.சி.கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசிய சர்ச்சை கருத்தினை எதிர்க்கும் வகையில் விமர்சித்துள்ளார்.

இதனை அவரது கட்சி தொண்டர்கள் காயத்ரி வீட்டிற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தன் உயிருக்கு ஆபத்து என்று சென்னை காவல் ஆணையத்திற்கு சென்று போலிசாரிடம் புகாரளித்துள்ளார்.

எனக்கு தொலைப்பேசி மூலம் கொலைமிரட்டல் வருவதும், வீட்டில் தெரியாத நபர்கள் சுற்றுவதுமாக இருப்பதால் எனக்கு தகுந்த பாதுகாப்பு வேண்டி கோரிக்கை மனுவை அளித்துள்ளார் காயத்ரி.