பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் தான் இது.. நடிகை நித்யாமேனன்..

Report
310Shares

தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் தற்போது நடித்து வருபவர் நடிகை நித்யாமேனன். இவர் சமீபத்தில் கோவாவில் நடந்த இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் முதன்முதலாக கலந்து கொண்டார். அங்கு நடிகர், நடிகைகள் பலர் கலந்து கொண்டு பேட்டியளித்தும் வந்தனர்.

இதில் நடிகை நித்யாமேனன் சில அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். என்னுடைய மனநிலையில் சினிமாத்துரைக்கு முற்றிலும் வேறுபட்டு இருந்தது. நான் விலங்குகளை பற்றி ஆய்வு செய்து படமெடுத்து வந்தவள். சினிமாவிற்கு வருவதாக என் ஆசை இல்லை.

என் பெற்றோரின் ஆசையால் சந்தர்ப்ப சூழலால் தான் நான் இப்போது நடிகையாக இருக்கிறேன். சினிமா எனக்கு இப்போது மிகவும் பிடிக்கிறது. அழகான இந்த துறையில் மக்களின் மனநிலையில் என்னால் மாற்ற முடிகிற அளவிற்கு நான் இருக்கிறேன் என்று கூறினார்.

மேலும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை போன்றது தான் எனக்கும் சினிமாவிற்கும் உள்ள பந்தம். கணவன் மனைவி எப்படி காதலில் திருமணத்திற்கு பிறகு இருக்கிறார்களோ அது போலத்தான் நானும். நான் மற்றவர்கள் சொல்லித்தந்து நடிப்பவள் கிடையாது. கதையை படித்து நானாக நடித்து வந்தவள் தான் நான் என்று கூறியுள்ளார் நிதயாமேனன்.