இரண்டாம் திருமணத்தை உறுதி செய்த பிரபல சீரியல் நடிகை.. மாப்பிள்ளை இவர் தான்..

Report
473Shares

பிரபல தனியார் தொலைக்காட்சியில் சுந்தர்.சி.யின் கதைக்களத்தில் உருவான சீரியல் 'நந்தினி'. இந்த தொடரின் மூலமாக தான் தமிழ் சின்னத்திரையுலகில் அறிமுகமானார் நடிகை நித்திய ராம்.

இவர் முதன் முதலில் கன்னட சின்னத்திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். இதற்கு பிறகு 'முட்டு மனசே' என்ற படத்தின் மூலம் கன்னட திரையுலகிலும் காலடி எடுத்து வைத்தார் இவர்.

மேலும், அண்மையில் கூட நித்தியவை பற்றி சில சர்ச்சைக்குரிய விஷயங்கள் வெளிவந்தது. அது என்னவென்றால் நித்திய ஆஸ்திரேலியாவை சேர்ந்த தொழிலதிபர் கௌதம் என்பவரை காதலித்து வருகிறார் என்றும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள போகிறார்கள் என்று தகவல்கள் கசிந்தது.

இந்நிலையில் இந்த விஷயத்தை உறுதி செய்துள்ளார் நித்திய ராம், ஆம் நாங்கள் இருவரும் வரும் 6ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள போகிறோம். ஆனால், இது காதல் திருமணம் அல்ல கௌதமின் தாயாரும் எனது தாயாரும் தோழிகள் அவர்கள் முடிவுப்படி மட்டுமே தான் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள சம்மதித்தோம் என்று ஓப்பனாக கூறியுள்ளார் நித்திய ராம்.

17403 total views