தனது வருங்கால கணவர் இப்படிதான் இருக்கவேண்டும்: யாஷிகா ஆனந்த்... அதிர்ச்சியான ரசிகர்கள்..!

Report
39Shares

தமிழில் துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். பின்னர் இவர் நடித்த "இருட்டு அறையில் முரட்டுக் குத்து" படம் மற்றும் "பிக் பாஸ் சீசன் 2" நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் அக்ட்டிவாக இருந்து வரும் யாஷிகா ஆனந்த். அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களைப் பதிவிட்டு சர்ச்சையில் சிக்கிக்கொள்வார். தற்போது தனது வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

அதில் நான் ஒரு ஹாப்பி சிங்கள், எனது கணவர் ஜென்டில்மேனகா இருக்க வேண்டும். என்னை நிறையக் காதலிக்க வேண்டும். நகைச்சுவை உணர்வு மிக்கவராக, ஜாலியாக ரொமான்டிக்காகவும், சாகச விரும்பியாகவும், கொஞ்சம் திமிர் பிடித்தவராகவும் இருக்க வேண்டும். அவருக்குப் பாடவும், நடனமாடவும், சமைக்கவும் தெரிந்திருக்க வேண்டும். முக்கியமாகத் தாடி வைத்திருக்க வேண்டும் என்கிறார்.