
தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு என்று சில கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் இருக்கிறது. அதை மீறி அவர்கள் சினிமாத்துறையில் இருந்து தூக்கி எறியுமளவிற்கு சென்று விடுவார்கள். அந்தவகையில் நடிகைகளின் வயது பொருத்து அவர்களின் படவாய்ப்புகளின் மார்க்கெட்டும் இருக்கிறது. இதில் 80, 90 களில் கொடிகட்டி பறந்த நடிகைகள் காணாமலே போய் விடுகிறார்கள்.
அந்தவகையில் காணாமல் போனவர் தான் நடிகை ஜெயஸ்ரீ. தமிழில் நடிகர் மோகன் நடித்த ’தென்றலே என்னை தொடு’ படத்தில் அறிமுகமாகி அதை தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி ஹிட் கொடுத்தார். 1988ல் திருமணமான பின் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.
தற்போது 54 வயதாகி தன் குடும்பத்துடன் வாழ்ந்து வரும் ஜெயஸ்ரீ, ஆதரவற்றவர்களுக்காக அரசு நடத்தி வருகிற தன்னார்வலத்தொண்டு காப்பகத்தில் பணி புரிந்து வருகிறார்.
சுமார் தன்னுடைய 30 ஆண்டுகால சினிமாத்துறையை விட்டு சமையல் பெண்ணாக வேலை செய்வது அவருக்கு மன நிம்மதியை தருவதாகவும் இருக்கிறது என்று கூறியுள்ளாராம். சமீபத்தில் சில படங்களில் மட்டும் நடித்து வருகிறார் நடிகை ஜெயஸ்ரீ.