ஏழு வயது குறைவானவரை டேட்டிங் செய்ய ஆசைபடும் பிக்பாஸ் நடிகை.. ஷாக்கான ரசிகர்கள்...!

Report
293Shares

பெங்களூரூவைச் சேர்ந்த மாடல் நடிகையான ரைசா வில்சன் விளம்பரங்களில் மட்டும் நடித்து வந்தார். பின்னர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன் ஒன்றில் 16 நட்சத்திரங்களில் ஒருவராகப் பங்கேற்றார். அந்நிகழ்ச்சியின் முலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.

இதன்பின் ஹரீஷ் கல்யாணுடன் பியார் பிரேமா காதல் படத்தில் நடித்தார். அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அவருக்குப் படத்தில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. தற்பொழுது அவர் பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

இந்நிலையில் ரைசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்பொது ஒரு ரசிகர், “ உங்களை விட 7 வயது குறைவான நபரை நிங்கள் டேட்டிங் செய்விங்களா ”, என கேட்டார். அதற்கு அவர் “ ஏன் நீங்க என்னைவிட 7 வயது குறைந்தவரா ? டேட்டிங் செய்வதற்கு வயது தடையிலை. யாருடன் வேண்டுமானாலும் டேட்டிங் செய்யத் தயார்”, என ரைசா பதில் அளித்தார்.

13674 total views