தமிழ் படங்களை புறக்கணிக்கும் பிரபல நடிகர்..இயக்குநர்கள் தான் காரணமா? அவரே சொன்ன பதில்..

Report
56Shares

90 களில் அனைத்து இளம்பெண்களின் கனவு கண்ணனாக இருந்தவர் நடிகர் மாதவன். 60படங்களுக்கு மேல் நடித்திருக்கும் மாதவன் தமிழில் அலைப்பாயுதே படத்தில் தான் பிரபலமானார். அதையடுத்து மனிரத்தினத்தின் சில படங்களில் நடித்தாலும் இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளுக்கும் தாவிச்சென்றார்.

சரியான கதைகளம் அமையாததால் பாலிவுட் படங்களில் ஆர்வம் காட்ட துவங்கினார். 4 வருடங்கள் கழித்து தமிழில் இறுதி சுற்று படத்தில் நடித்து மீண்டும் அவர் விட்ட இடத்தினை பிடித்தார். இப்படி தமிழ் படங்களை புறக்கணிக்க என்ன காரணம் என்று சமீபத்தில் நடைபெற்ற தனியார் இணையதள விருது விழாவில் இது பற்றி கேள்வி எழுப்பபட்டது.

அதற்கு பதிலளித்த நடிகர் மாதவன், 'இறுதிச்சுற்று, விக்ரம் வேதா' போன்ற படங்களை இயக்கும் நடிகர்கள் மிகவும் தமிழ் சினிமாவில் குறைவாகவுள்ளனர் என்று கூறியுள்ளார். மேலும் நான் ரக்கெட்ரி என்ற படத்தினை இயக்கி வருவதால் பிஸியாக இருப்பதாகவும் கூறினார்.

மேலும் சமீபத்தில் இந்தியாவில் பேசப்படு வரும் குடியுரிமைச்சட்டத்திருத்தத்தை பற்றி கேள்வி கேட்டதற்கு இதற்கான இடம் இது இல்லை என்று கூறி பதிலளிக்க மறுத்துவிட்டார்.