பிரபல நடிகையை இந்த காரணத்திற்காகதான் நடிகர் சிம்பு விளக்கினாரா?.. அம்மாவால் நடக்காததை மாற்றிய எஸ்டிஆர்..

Report
88Shares

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிரபலமானவர்கள் சிலர் இருக்கிறார்கள். அதில் பிரபல இயக்குநர் இசையமைப்பாளரின் மகனான சிலம்பரசன் என்கிற சிம்பு. உறவைக்காத்த கிளி என்கிற அவரது தந்தையின் படத்திலேயே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடித்தவர். அதன்பின் காதல் அழிவதில்லை என்ற படத்தின் கதாநாயகனாக தந்தையின் இயக்கத்தில் நடிக்க ஆரம்பித்தார்.

தற்போது பல படங்களில் நடித்து வரும் சிம்பு பல பிரச்சனைகளால் தமிழ் சினிமாவில் இருந்து ஒதுக்கப்பட்டு வருகிறார். சரியாக படபிடிப்பிற்கு வராததாலும், பல காதல் தோல்விகளாலும் பாதிக்கப்பட்ட சிம்பு ஆன்மீகத்தில் ஆர்வம் கொண்டு அதன்பக்கம் சில வருடம் சென்றார்.

தற்போது பிரபல தொலைக்காட்சி நடத்தி வரும் நிகழ்ச்சி ஒன்றை முன்னணி நடிகையான குஷ்பு தொகுத்து வழங்கி வருகிறார். கடந்தவாரம் நடிகர் சிம்பு கலந்து கொண்டு தன் அனுபவங்களை கூறியுள்ளார். சிறு வயது காதல் பற்றி கேட்ட கேள்விக்கு பதிலளித்த சிம்பு, நடிகை ஜோதிகாவை பற்றி கூறி ஓப்பனாக பேசியுள்ளார்.

10 ஆம் வயது படிக்கும் போது ஒரு பெண்ணிடம் காதல் கொண்டதாகவும், அதன்பின் நடிகை குஷ்பு மீது க்ரஸ்ஸாக இருந்தேன் என்றும் கூறினார். நடிகை ஜோதிகாவை என் அம்மா ’இந்த பொண்ணு ஓவர் ஆக்டிங், அம்மா கேரக்ட் தான் உன் கூட நடிப்பாங்க என்று கூறினார். ஆனால் மன்மதன் படத்தில் ஜோதிகா என்னுடன் ஜோடியாக நடித்தார் என்று கூறியுள்ளார்.