அந்த மாதிரி எண்ணம் எனக்கு இல்ல - நடிகை நஸ்ரியா ஒபன் டாக்...

Report
107Shares

மலையாள நடிகர் நிவின் பாலி நடிப்பில் வெளியான நேரம் படத்தில் நடித்து கதாநாயகியாக தமிழில் அறிமுகமானவர் நடிகை நஸ்ரியா. இதன்பின் இவர் நடித்த ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு நடிகர் ஃபகத் பாசிலுடன் இவருக்கு திருமணமானது. திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிக்காமல் இருந்த நஸ்ரியா. தற்போது அவரது கணவருடன் இணைந்து டிரான்ஸ் என்ற படத்தில் நடித்துள்ளர்.

இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் தொடங்கியது குறித்து நடிகை நஸ்ரியா கூறியுள்ளார். அவர் கூறியதாவது : “திருமணத்திற்கு பின் ஒரே ஒரு படத்தில் நடித்தேன். தற்போது டிரான்ஸ் படத்தில் நடித்திருக்கிறேன்.

மேலும், நடிப்பதை நிறுத்திவிட்டது ஏன் என்று கேட்கிறார்கள். நடிப்பதை நிறுத்திவிட்டதாக நான் யாரிடமும் சொல்லவில்லை. அப்படி ஒரு எண்ணமும் எனக்கு இல்லை. கதையும் கதாபாத்திரமும் பிடித்தால் மட்டுமே நான் நடிக்கிறேன்” என நஸ்ரியா கூறியுள்ளார்.

4279 total views