இந்தியன்2 ஷுட்டிங்கில் நடந்தது போல் பிகில் பட ஷுட்டிங்கிலும் நடந்தது - அதிர்ச்சியளித்த நடிகை அம்ரிதா..

Report
108Shares

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2. இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விழுந்ததில் 3 பேர் பலியாகினர், 10 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவம் தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது பிகில் திரைப்படத்தில் நடித்த நடிகை அம்ரிதா இதே போல் சம்பவம் பிகில் படப்பிடிப்பு தளத்திலும் நடந்துள்ளது என டிவிட்டரில் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் : “அந்த இடத்தில் பிகில் பட ஷுட்டிங் நடந்தபோது இதே போல் விளக்கு ஒருவர் மீது விழுந்தது. அதை பார்த்து நாங்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தோம். மேலும், யாரும் அங்கு படப்பிடிப்பிற்காக செல்ல வேண்டாம், அங்கு நிறைய நெகட்டிவ் வைப்ஸ் உள்ளது” என கூறியுள்ளார்.

4012 total views