நடிகை வாணி போஜன் பெயரை கேட்டு தொல்லை.. இயக்குநர் மீது வழக்கு பதிவால் அதிர்ச்சி..

Report
79Shares

சில தினங்களுக்கு முன் நடிகர் அசோக் செல்வன், ரித்திகா சிங், வானி போஜன் நடித்து வெளியான படம்தான் ஓ மை கடவுளே. இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கி வெளியாகி வெற்றிபெற்று ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்படத்தில் நடிகர் விஜய்சேதுபதி சிறிய கவுரவ கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

இந்நிலையில் இப்படத்தின் ஒரு காட்சியால் அப்படத்தின் இயக்குநர் மீது வழக்கு ஒன்று பதிவாகியுள்ளது. படத்தில் வானி போஜன் மீரா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்க அசோக் செல்வனுக்கு வாணி போஜன் மொபைல் நம்பர் ஒன்று கொடுப்பார். இப்படத்தில் வாணி போஜன் நம்பர் தான் என்று படத்தினை பார்த்த சிலர் அந்த மொபைல் நம்பருக்கு வாணி போஜன் இருக்கிறாரா என்று கேள்வி கேட்டு வருகிறார்கள்.

ஆனால் அந்த நபரை பல ஆண்டுகளாக உபயோகித்து வருவதாகவும், நடிகையின் பெயரை கூறி தொல்லை செய்து வருவதாகவும், எண் நம்பரை அணுமதியின்றி படத்தில் பயன்படுத்தியுள்ளார்கள் என்று போலிசில் புகாரளித்துள்ளார்.

இதனால் படத்தின் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இக்கட்டான சூழலில் இருந்து வருகிறார்.

3442 total views