மருமகனுடன் கேவளமாக வர்ணித்து புகைப்படம் வெளியிட்ட நபர்.. கதறியழும் பிரபல நடிகை..

Report
560Shares

நடிகை தாரா கல்யாண் மலையாள தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர். இவர் ஒரு சில படங்களிலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், இவரின் மகளான சௌபாக்கியாவும் டிக்டாக் மூலம் பிரபலமானார்.

52 வயதான தாரா கல்யாணின் மகளான சௌபாக்கியாவிற்கும் அர்ஜுன் என்பவருக்கும் கடந்த மாதம் 20 ஆம் தேதி அனைவரின் முன்னிலையில் திருமணம் நடந்துள்ளது. திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை மர்ம நபர் ஒருவர் தாராவுக்கும் அவரின் மருமகன் அர்ஜுனுக்கும் தவறான உறவு உள்ளது என வதந்தியை பரப்பியுள்ளார். இது சமுகவலைத்தளத்தில் வைரலாக பரவியது.

இந்த வதந்தியால் தாரா மற்றும் அவரின் குடும்பத்தினர் மிகுந்த சங்கடத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் கதறி அழுதபடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் தாரா கல்யாண்.

அதில் இந்த திருமணத்தை யாருடைய துணையுமின்றி நான் செய்து வைத்தேன், என்னை பற்றி அந்த கடவுளுக்கு தெரியும், கொஞ்சமாவது பெண்களுக்கு மரியாதை கொடுக்க கற்று கொள்ளுங்கள். பெண்களை பற்றி இப்படி இழிவாக பேசுறீங்களே! உங்கள் விட்டில் பெண்கள் இல்லையா ? அல்லது நீங்கள் தான் ஒரு பெண்ணின் வயிற்றில் பிறக்கவில்லையா ? என அவர் மிகுந்த வலியுடன் வீடியோவில் கேள்வி கேட்டு கதறி அழுதுள்ளார்.

19971 total views