என்னையும் அட்ஜஸ்ட் பண்ண அழைத்தார்கள்.. நடிகையிடம் எல்லைமீறி கேள்விகேட்ட தொகுப்பாளர்..

Report
1937Shares

தொலைக்காட்சி மூலம் பிரபலமாகி தற்போது நட்சத்திரங்களாக பலர் முன்னேறி வந்திருக்கிறார்கள். அந்த வகையில் பிரபல தொலைக்காட்சி சீரியலான மாயா, தெய்வமகள் என்ற சீரியல் மூலம் வெள்ளித்திரையில் பிரபலமானார் நடிகை வாணி போஜன். இதை தொடர்ந்து தமிழ் விளம்பரங்களில் நடித்து கொண்டிருந்தார்.

இதைதொடர்ந்து தமிழ் சினிமாவில் சில படங்களில் கமிட்டாகி தற்போது திரையில் மிண்ணுகிறார். சமீபத்தில் வெளியாகிய ஓ மை கடவுளே என்ற படத்தில் நடிகர் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் தற்போது நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக பல பேட்டிகளில் பங்கேற்று படத்தை பற்றிய அனுபவத்தை கூறி வருகிறார். தனியார் இணையத்திற்கு பேட்டியளித்த வாணி தொகுப்பாளரின் எல்லைமீறிய கேள்வியால் கோபத்தில் வெளியேறினார். இதை தொடர்ந்து சமாதானப்படுத்தி மீண்டும் பேட்டியில் தொடர்ந்த வாணியிடம், அட்ஜஸ்ட்மெண்ட் பற்றி உங்கள் கருத்து என்ன என்று தொகுப்பாளர் கேட்டார்.

”தமிழ் சினிமாவில் மட்டுமல்ல அனைத்து பெண்களுக்கும் இது போன்ற செயல் நடக்கிறது. எனக்கும் நடந்திருக்கிறது. ஆனால் அது என் மேனேஜரிடம் கேட்டுள்ளார்கள். நேரடியாக எண்ணிடம் வந்தது இல்லை என்று கூறி நடிகைகளுக்கு இந்த மாதிரியான பிரச்சனைகள் வராமல் இருந்தால் நன்றாக இருக்கும்” என்று கூறியுள்ளார் வாணி போஜன்.

69814 total views