20 வருடங்களுக்குபின் சூப்பர் ஸ்டாருடன் ரொமான்ஸிற்காக ஆளேமாறிப்போன 43 வயது நடிகை.. அதிர்ச்சியான ரசிகர்கள்..

Report
491Shares

தமிழில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அன்புடன் ரஜினி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அனைவரின் மனதை கவர்ந்தவர் நடிகை மீனா. அதன்பின் நடிகர் ராஜ்கிரண் நடிப்பில் வெளிவந்த என் ராசாவின் மனசுனிலே என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுக்கு கோடியாக நடித்து மிகவும் பிரபலமானார். மேலும், இவர் தெலுங்கு திரையுலகிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். சிறுவயதில் குழந்தையாக நடித்த பின் ஹீரோயினாக எஜமான், வீரா, முத்து படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகைகள் பட்டியலில் சேர்ந்தார்.

இந்நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த்துடன் 20 வருடங்களுக்கு பின் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார் மீனா. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதில், அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதத்தில் மிகவும் ஸ்லிம்மான தோற்றம் அளித்துள்ளார் நடிகை மீனா. மேலும், இதை கண்ட ரசிகர்கள் ரஜினியுடன் நடிப்பதற்காக நீங்கள் இப்படி மாறி விட்டீர்களா.. என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

15290 total views