மிஸ்டர் போலி பகுத்தறிவாதியே... தன்னை அசிங்கப்படுத்திய ரசிகருக்கு பதிலடி கொடுத்த நடிகர் விவேக்..

Report
48Shares

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களான கவுண்டமணி, செந்தில், வடிவேலுவிர்கு அடுத்தபடியாக பெரியளவில் ஜாம்பவனாக யாரும் வரவில்லை. ஓரளவிற்கு கருத்து கலந்த காமெடிகளை படங்களில் அளித்து மக்கள் மனதை பெற்றவர் தான் நடிகர் விவேக். தமிழ் சினிமாவில் தற்போது மூத்த நடிகர் என்ற அந்தஷ்தினையும் பெற்று படங்களில் நடித்து வருகிறார்.

முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வரும் விவேக் தற்போது சமுக அக்கறை கொண்டு சில விஷயங்களை செய்து வருகிறார். சமுகவலைத்தளத்தில் சமுக கருத்துக்களை கூறி ரசிகர்களுடன் பேசி வருகிறார்.

இந்நிலையில் நடிகர்கள் எப்படிபட்டவர்கள் என்று சமீபத்தில் அவரது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். ரஜினி, விஜய், அஜித் ஆகியோர்களை மட்டும் குறிப்பிட்டு டிவிட் செய்த நடிகர் விவேக்கிற்கு, கமல்ஹாசன் புகைப்படத்தினை வைத்த ஒரு நபர், ”கமல் சார் பற்றி ஒன்றும் சொல்வறிகு இல்லையா மிஸ்டர் போலி பகுத்தறிவாதியே” என்று கேட்டுள்ளார்.

இதற்கு பதிலடி கொடுத்த விவேக், என்னை பற்றி அவரிடம் சொல்லுங்கள், அவரே உங்களை திருத்துவார். எங்கள் நட்பு முட்டாள்களுக்கு புரியாது” என்று கூறி பதிலளித்துள்ளார்.

1591 total views