நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் ரைய்டு.. மாஸ்டர் படத்திற்காக பெரிய ப்ளானா?

Report
12Shares

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். லட்சகணக்கில் ரசிகர்களை வைத்திருக்கும் இவர் சமுக அக்கரை கொண்ட படங்களில் சமீபத்தில் நடித்து வருகிறார். அதுவும் அரசியலில் இருக்கும் பிரச்சனைகளை மையப்படுத்தியும் நடித்து வருகிறார்.

இதனால் அவரின் வீட்டில் சமீப காலமாக வருமான வரித்துறையினர் ஆய்வு மேற்கொண்டு அதிர்ச்சியளித்து வருகிறார்கள். விஜய் படங்கள் வெளியாகும் என்று சொன்னாலே விஜய்க்கு பல இடங்களில் இருந்து சுழட்டி அடிக்கும் பிரச்சனைகளாகவே வரும்.

தற்போது பனையூரில் இருக்கும் அவரது வீட்டில் வருமான வரித்துறையினர் ஆய்வுகளை மீண்டும் நடத்தி வருகிறார்கள். இதற்கு முன் சில தினங்களுக்கு முன் கைப்பற்றப்பட்ட சில ஆவணங்களை கொண்டு விசாரிக்கவே இந்த ஆய்வு என்று கூறப்படுகிறது.

மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில் நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்வதில் ரசிகர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர்.

557 total views