இயக்குநர் கெளதம் மேனன் இப்படி ஆனதற்கு இவர் தான் காரணம்.. ஓப்பன் டாக்கால் ரசிகர்கள் அதிர்ச்சி

Report
91Shares

தமிழ் சினிமாவில் காதல் படங்களை மிகவும் வித்தியாசமாக எடுக்கும் இயக்குநர்கள் இருந்தாலும் தனக்கே உரிய பாணியில் காதல் படங்களை எடுப்பவர் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன். மின்னலே படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்த கெளதம் அடுத்தடுத்த படங்களை இயக்கி பிரபலமானார்.

சமீபத்தில் இவர் இயக்கிய படங்கள் வெற்றியடையவில்லை என்றாலும் ரசிகர்கள் மனதில் நின்று இடம்பெற்றது. இவரின் இயக்கத்தில் உருவாகி நடிகர் விகரம் நடித்து முடித்த துருவ நட்சத்திரம் வெளியாகாமலே இருக்கிறது.

இந்நிலையில் இயக்கத்தை விட்டு படங்களில் கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார் இயக்குநர் கெளதம். சமீபத்தில் வெளியான ஓ மை கடவுளே மற்றும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தில் நடித்தும் உள்ளார்.

படங்களில் நடிக்க ஆர்வம் வந்ததற்கு காரணம் இயக்குநர் விஜய் மில்டன் தான் என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். நடித்தால் நல்லா இருக்கும் என்று என்மீது நம்பிக்கை கொடுத்து நடிகனாக கலமிறக்கினார் விஜய் மில்டன் என்று கூறியுள்ளார்.

2913 total views