படத்தைவிட்டு வெளியில் போ. என்னை கெட்டவார்த்தையில் பேசினான்.. பிரபல இயக்குநரை மிரட்டிய நடிகரால் பரபரப்பு..

Report
23Shares

தமிழ் சினிமாவில் பலரால் வியக்கவைக்கும் படங்களை இயக்கி திரைத்துறைக்கு பெருமை சேர்ந்தவர் இயக்குநர் மிஷ்கின். சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளியான சைக்கோ படம் தமிழ் சினிமாவில் பெரியளவில் விமர்சனங்களையும், பாராட்டுக்களையும் பெற்றது.

இந்நிலையில் 2017ல் வெளியான துப்பறிவாளன் படத்தினை இயக்கிய மிஷ்கின் நடிகர் விஷால் நடித்து வெளியாகி வெற்றியை தேடித்தந்தது. நடிகர் விஷாலில் திரைத்துறையில் நல்ல நடிப்பை காமித்தார். இப்படத்தின் 2 பாகம் சமீபத்தில் நடிகர் விஷால் தயாரிப்பில் படப்பிடிப்பு துவக்கப்பட்டது. படத்தின் பாதி லண்டனில் எடுக்கப்போவதாக மிஷ்கின் கூறியிருந்துள்ளார்.

அதற்கான பட்ஜெட்டினையும் அறிவித்து படப்பிடிப்பு சென்றநிலையில் விஷாலுக்கும், மிஷ்கினுக்கு இடையே சில பிரச்சனைகளால் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் படத்தில் இருத்து இயக்குநர் மிஷ்கின் நீக்கப்பட்டதாக அவரே அறிவித்திருந்தார்.

சில நாட்களுக்கு முன் மிஷ்கின் 15 கண்டிஷன் கொண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதற்கு விஷாலும் எதிர்த்து அறிக்கையை விடுத்துள்ளார்.

இதைதொடர்ந்து நேற்று பிரபல நிறுவனம் நடத்திய விழாவில் பேசிய இயக்குநர் மிஷ்கின் விஷாலை பற்றி கூறியுள்ளார். அவர் பேசியது, சினிமா இல்லைன்னா என்ன என்னை பயமுறுத்துகிறான். மற்றவர்களிடம் பற்றி கேளுங்கள் என்னை பற்றி. துப்பறிவாளம் ஓடவில்லை என்று கூறினான் அவன்(விஷால்).

மேலும் என்னை கெட்டவார்த்தையில் பேசினான். நான் எதும் செய்யவில்லை. அவனை நான் தம்பியாக பார்த்தேன். என்று கூறினார். இயக்குநர் பேசிய வீடியோ தற்போது சமுகவலைத்தளத்தில் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1292 total views