2021ல் நான் சி.எம் ஆவேன்.. கேள்விகேட்ட பத்திரிக்கையாளர்களை தன் பாணியில் ஓடவிட்ட நடிகர் வடிவேலு..

Report
60Shares

காமெடி கலந்த படங்கள் தற்போது அதிகமானாலும் வயிறு குளுங்க சிரிக்க வைக்கும் காமெடி என்றாலே அது கவுண்டமணி, செந்தில், வடிவேலுவாகத்தான் இருக்க வேண்டும். தன் டயலாக், உடல் பாவனையில் மக்கள் மனதில் சிரிப்பை கொட்டியவர் நடிகர் வடிவேலு.

கடந்த சில ஆண்டுகளாக படத்தில் நடிப்பதை நிருத்திய வடிவேலு மீண்டும் நடிக்க வருவென் என்று எப்போது கூறுவார் என்று ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். சமீபத்தில் நடிகர் வடிவேலு திருச்செந்தூர் சென்று சாமியை கும்பிட்டுள்ளார்.

சாமியை கும்பிட்டுவிட்டு பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசியுள்ளார். ரஜினி அரசியல் வருகை குறித்து கேள்விகேட்ட பத்திரிக்கையாளர்களுக்கு அவர் வருவது யாருக்கும் தெரியாது அவருக்கும் தெரியாது என்று காமெடியாக பதில் கூறினார். மேலும் 2021ல் நான் சி.எம் ஆகுவேன் என்று கூறினார். எனக்கு எல்லோரும் ஓட்டுபோடுவீங்களே அப்ப நான் தான் சி. எம் என்று காமெடியாக கூறியுள்ளார்.

மேலும் அவரின் கேள்விகேட்ட பத்திரிக்கையாளர்களை அவரின் பாணியிலேயே ஓடவிட்டு பதில் கூறியுள்ளார். அவரளித்த பேட்டி தற்போது சமுகவலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.

2203 total views