கைத்தட்டலுக்காகவா? வீட்டில் இருக்கும் அஜித் ரசிகர்களுக்காகவா?.. தல பற்றி பேசியது விஜய்யின் வியூகமோ!

Report
60Shares

தமிழ் சினிமாவில் ரஜினி, கமலுக்கு அடுத்ததாக பெருமளவில் ரசிகர்களை வைத்திருப்பவர்கள் நடிகர் அஜித், விஜய். இரு நடிகர்களுக்கும் உலகளவில் ரசிகர்கள் பட்டாளம் குவிந்த வண்ணம் இருக்கிறார்கள். இருவரின் படங்கள் வெளிவந்தால் ரசிகர்கள் போட்டி போட்டு கொண்டாடுவார்கள்.

அதிலும் சமுகவலைத்தளத்தில் பல சாதனைகளையும் இதனால் போட்டிகள் நடக்கும். இந்நிலையில் கடந்த மார்ச் 15ல் நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்து முடிந்தது. ரசிகர்கள் இல்லாத விழாவாக இருந்தது பெரும் பின்னடைவாக இருந்தது. இதற்கான காரணம் நடிகர் விஜய் மேடையிலேயே கூறினார்.

நடிகர் விஜய் விழாக்களில் பேசும் போது தல அஜித்தினை பெயரை பற்றி எங்கும் பேசியது கிடையாது. ஆனால் மாஸ்டர் இசைவெளியீட்டு விழாவில் நண்பர் அஜித் மாதிரி ஸ்டைலாக கோட் சூட் போட்டு வரலாம்னு நினைச்சேன் என்று தான் அணிந்திருந்த கோட்சூட்டை பற்றி பேசும் போது கூறினார்.

அஜித்தை பற்றி பேசி முடித்த போது அரங்கமே அதிரும் அளவிற்கு கத்தினார் ரசிகர்கள். சிலர் அஜித்தை பற்றி பேசியது எதாவது காரணமாக இருக்கும் என்று கிசுகிசுத்த வண்ணம் இருக்கிறார்கள்.

2930 total views