பிரபல இயக்குநரால் மன உளைச்சலுக்கு ஆளான நடிகர் விஜய்.. ஷாக்கான அரங்கம்

Report
112Shares

முன்னணி நடிகர்கள் படம் என்றாலெ பிரமாண்டமாக அப்படத்தின் விழாக்கள் நடைபெறும். அந்த அளவிற்கு தன் படத்தின் விழாக்கள் சிறப்பாக இருக்கும் என்று ஆசைப்படுவர் நடிகர் விஜய். இவர் நடித்து வெளியாக காத்திருக்கும் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா சில காரணங்களால் சிறியளவில் பெருமளவு ரசிகர்கள் இல்லாமல் நடைபெற்றது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அனிருத், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட அனைத்து பிரபலங்களும் கலந்து கொண்டனர். விழாவில் கடைசியாக பேசிய நடிகர் விஜய் பல சுவாரஷ்மான விஷயங்களை கூறி அனைவரையும் ஈர்த்தார். இதில் அஜித் ரசிகர்களையும் தல பற்றி பேசி அரங்கத்தை அதிரவிட்டார்.

இந்நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜை பற்றி பேசிய நடிகர் விஜய், படபிடிப்பில் யாருக்கும் டயலாக் பேப்பர் கொடுக்காமல் இதுதான் ஷாட் என்று கூறினார். அதுவும் எனக்கு பட முழுவதும் சீன் பேப்பரே கொடுக்காமல் வாயில் மட்டும் சொல்லுவார். இதனால் நான் மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டேன். நான் வீட்டுக்கு போறேன் என்று கூறினேன். நான் அப்படி சொன்னதால் தான் சீன் பேப்பரே கொடுத்தார் இயக்குநர் என்று காமெடியாக கூறினார்.

4744 total views